ரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள்…..!

ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு இன்று நம்மிடையே பெரும்பாலானோருக்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அதை விட மாரடைப்பு ஏற்படும் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

இதே நேரத்தில் குறைந்த ரத்த அழுத்தம் பற்றி யாராவது கண்டு கொண்டிருக்கிறோமா? அது சத்துக்குறைபாடு என்று நினைத்து அப்படியே விட்டு விடுவோம். ஆனால், இது ஒரு சைலண்ட் கில்லர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.ரத்தம் இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும்போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இதனைத் தான் நாம் ரத்த அழுத்தம் என்கிறோம்.பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. இருந்தால், அது இயல்பு அளவு.

உலக சுகாதார நிறுவனம் ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை நார்மல் என்று வரையறை செய்துள்ளது.இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்றும், 90/60 மி.மீ. பாதரச அளவுக்குக் கீழ் குறைந்தால் அதைக் குறை ரத்த அழுத்தம் என்றும் சொல்கிறது.

தடகள வீரர்கள், கடுமையாக உடற்பயிற்சி செய்பவர்கள், தீவிரமாக ஜிம் பயிற்சி செய்பவர்கள், ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், படுக்கையில் நீண்ட காலம் படுத்திருப்பவர்கள் போன்றோருக்குக் குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, வழக்கத்துக்கு மாறான அதீத நாவறட்சி, சோர்வு, பலவீனம், கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, பார்வை குறைவது, மனக்குழப்பம், வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைமை,உடல் சில்லிட்டுப்போவது, மூச்சுவாங்குவது போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது பல அறிகுறிகளோ உங்களால் உணர முடியும்.

இதனை சரி செய்ய வேண்டுமானால் அடிப்படை காரணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அதனை தீர்க்க முடியும்.பெரும்பாலும் குறைவான ரத்த அழுத்தத்திற்கு காரணம் சத்துக்குறைபாடாகவே இருக்கிறது. பட்டாணி ரத்த அழுத்தத்தை அதிகரிக்க உதவிடும். இதில் ப்ரோட்டீன், விட்டமின்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. ஒட்டுமொத்த இதய பராமரிப்பிற்கும் இது உதவிடும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சாயமேற்றப்பட்ட பட்டாணியை விட பச்சை பட்டாணியை வாங்கி உரித்து சமைத்தால் நல்லது.நம் உடலிலிருந்து வெகுவான ஸ்டார்ச் குறைவதாலேயே குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஸ்டார்ச் அதிகமிருக்கும் உருளைக்கிழங்கு எடுத்துக் கொண்டால் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.

அதற்காக தொடர்ந்து உருளைக்கிழங்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடாதீர்கள். பின் அது வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திடும்.குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்ய விட்டமின் சி உணவுகளை நிறைய எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சு பழத்தை விட பப்பாளிப் பழத்தில் நிறைய விட்டமின்கள் நிறைந்திருக்கிறது. அதைவிட பப்பாளியில் அதிகளவு விட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன.இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமன் செய்திடும்.மதிய உணவிற்கு முன்பு கொய்யாப்பழத்தை சாப்பிடலாம். சிலருக்கு, குறிப்பாக அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு உணவு சாப்பிட்டவுடன் ரத்த அழுத்தம் குறையும்.இவர்கள் சாப்பிட அரை மணி நேரத்திற்கு முன்பாக கொய்யாப்பழம் சாப்பிட்டால் குறைவான ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.இதில், அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது அவற்றுடன் இதிலிருக்கும் ஃபைபர் உணவு செரிமானத்திற்கும் உதவிடும்.

தயிரில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவிடும். லஸ்ஸி தயாரித்து குடிக்கலாம். குறைந்த ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் மட்டும் தயிர் எடுக்காமல் தொடர்ந்து உணவில் சேர்ந்து வர வேண்டும்.

நம் அன்றாட உணவில் தக்காளி முக்கிய இடம் வகிக்கிறது. சருமத்திற்கும் உடல் நலனுக்கும் ஏராளமான நன்மைகளை செய்கிறது. தக்காளியில் இருக்கக்க்கூடிய லைகோபென் என்ற சத்து குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து உங்களை காப்பாற்றும்.