தயவு செய்து இந்த தகவலையும் அதிகமாகப் பகிருங்கள்…..எனக்கும் டிரம்புக்கும் இடையே உறவு இருந்தது என்று முன்னாள் பிளேய்பாய் பத்திரிகை மாடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியாகிகக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் பரபரப்பாகின்றன.
சமீபத்தில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் இப்படித்தான் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாகக் கூறியிருந்தார். இப்போது இன்னொரு பெண்ணும் தெரிவித்துள்ளார். இவர் பிளேய்பாய் இதழின் முன்னாள் மொடல் அழகி கரேன் மெக்டோகல்.
கரேன் நியூயார்க்கைச் சேர்ந்தவர், தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே 2006ம் ஆண்டு உடல் ரீதியான நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்புக்கு குழந்தை பிறந்த சில மாதங்களில் இந்த உறவில் ஈடுபட்டார் ட்ரம்ப்.இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் மேக்டோகலின் கூற்று பொய்யானது போலியானது என்று அதிபர் ட்ரம்ப் கூறியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த உறவு உண்மையானது என்று கூறியுள்ளார் கரேன். இது குறித்து அவர் தெரிவிக்கையில் 9 மாதம் இது நீடித்தது என்றும் நாங்கள் நெருக்கமாக இருந்தோம் பின்னர் அந்த உறவு அப்படியே மெல்ல கரைந்து போனது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கரேன் சொல்லும் அதே காலகட்டத்தில்தான் ட்ரம்ப் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானியுடன் உறவில் ஈடுபட்டிருந்ததாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். அப்படியானால் ஒரே நேரத்தில் இந்த இருவருடனும் ட்ரம்ப் நெருக்கமான உறவை பேணி வந்தாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.