தமிழ்நாட்டில் சடலமாக கிடந்த பெண்ணின் உடல் அருகில் நீண்ட நேரமாக அழுதுகொண்டிருந்த 3 வயது குழந்தையை பொலிசார் மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி அடுத்துள்ள சங்கரப்பேரி காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பென்ணின் உடல் கிடப்பதாகவும், அதனருகே 3 வயதுடைய ஆண் குழந்தை அழுது கொண்டிருப்பதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற பொலிசார் குழந்தையை மீட்டதோடு, பெண்ணின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மீட்கப்பட்ட குழந்தை கொலை செய்யப்பட்ட பெண்ணின் குழந்தையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.