யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு நடந்த வானவேடிக்கை நிகழ்வு அங்குள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாதகல் லூர்த் அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நடைபெற்றது.
இதன்போது நேற்றிரவு வான வேடிக்கை நிகழ்வு இடம்பெற்றது. பல வர்ணங்களில் வெடித்து சிதறிய வானங்கள் அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆலயத்தின் திருவிழாவுக்காக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட வான வேடிக்கைகள் வெடிக்க வைக்கப்பட்டன.
30 நிமிடங்களுக்கு மேல் நடத்தப்பட்ட வானவேடிக்கையால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.