தேவையற்று, சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சை முறை பிரசவத்திற்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள், அவர்கள் இயற்கையாகப் பிரசவிக்க போதுமான நேரம் கொடுக்கப்படுவதில்லை என்று உலக சுகாதார மையம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு காலத்தில் சிசேரியன் என்பதே அபூர்வமாக இருந்த நிலை மாறி இன்று சாதாரண பிரசவம் என்பது அபூர்வமாகி விட்டது.
மருத்துவர்கள் இயற்கை முறையில் பிரசவிக்க பெண்களுக்கு போதுமான நேரம் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
சிசேரியன் பிரசவங்களும், பிரசவத்தை வேகப்படுத்துவதற்காக oxytocin என்னும் மருந்தைக் கொடுப்பதும் இன்று உலகின் பல நாடுகளில் சகஜமாகிவிட்டது.
வேறு வழியில்லை என்னும்போது சிசேரியன் தேவையானதுதான். ஆனால், எந்த நாட்டிலும் அது 15 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்று அது தெரிவித்துள்ளது.
சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டு தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றால் பிரசவத்தை வேகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
பல பெண்கள் இயற்கையாக பிரசவிக்கவே விரும்புகிறார்கள். பிரசவத்தால் தாய்க்கோ குழந்தைக்கோ ஏதேனும் பிரச்சினை வரலாம் என்னும்போது மட்டுமே அறுவை சிகிச்சை அனுமதிக்கப்படலாம்.
சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு obesity மற்றும் asthma ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதுமட்டுமின்றி சிசேரியனுக்குள்ளாக்கப்படும் தாய்மார்களுக்கும் பின்னாட்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பலருக்கு சிசேரியனுக்குப் பிறகு ஏற்படும் கர்ப்பங்களில் கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.