தம்மை பிரதமராக நியமிக்குமாறு கோரியுள்ள அமைச்சர்!

தம்மை பிரதமராக நியமிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு உண்டு எனவும் இதனால், தமக்கு பிரதமர் பதவியை வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.

கொழும்பு வார இறுதி ஊடகமொன்று இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 117 உறுப்பினர்கள் தமக்கு ஆதரவாக உள்ளனர் என நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, நிமல் சிறிபால டி சில்வாவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளனர்.