இன்றைய காலகட்டத்தில் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதே கிடையாது.
ஆனால், ஒவ்வொரு காய்கறிகளிலும் நார்ச்சத்துகள், தாது உப்புகள், விட்டமின்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சில முக்கிய காய்கறிகளை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.
காலிபிளவர்
காலிபிளவரில் விட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.
இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது.
பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் வாயுத் தொந்தரவிலிருந்து பாதுகாக்கிறது, அத்துடன் உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுக்கோப்புடன் இருக்க உதவுகிறது.
இந்தப் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் பால்
மாங்கனீசு அதிகளவு காணப்படுவதால் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்கிறது.
காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.
ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.
பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.
பூண்டு
பூண்டை பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், மாரடைப்பு வராது.
வெள்ளையணுத்திறனின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது, ஊளைச் சதையைக் கரைக்கும்.
கொலஸ்ட்ரால் குறைக்க, நச்சுக்களை போக்க, இதய நலனை காக்க என பல வகைகளில் நன்மை விளைவிக்கிறது.
முட்டைக்கோஸ்
கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.
நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.