பொதுவாக அல்கஹோல் அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
எனினும் தற்போது மற்றுமொரு ஆபத்து தொடர்பில் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
அதாவது போதைப் பொருட்களை பாவிக்கும்போது மூளையில் ஏற்படும் கோளாறுகளை விட மது அருந்துவதனால் ஏற்படும் கோளாறு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது அருந்துவதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் தொடர்பாக 18 வயதிற்கு மேற்பட்ட 853 நபர்களை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது மூளையிலுள்ள வெண்நிறப்பொருளை அல்கஹோல் வெகுவாக பாதிக்கின்றது.
இந்த வெண்நிறப்பொருளானது நரைநிறப்பொருளுடன் தொடர்பாடலை மேற்கொள்வதன் ஊடாக உடலின் ஏனைய பகுதிகளுக்கு செய்திகள் அல்லது சமிக்ஞைகளை அனுப்பவல்லது.
எனவே வெண்ணிறப்பொருள் பாதிப்படைவதனால் மூளையின் செயற்பாடானது பாதிப்புக்கு உள்ளாகின்றது.