நீதிமன்ற வாசற்படியில் தடக்கி விழுந்த மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால் மஹிந்த காயங்கள் எதுவும் இன்றி தப்பினார்.

உச்சநீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதில் மஹிந்தவின் பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது உச்சநீதிமன்ற வாசற்படியில் கால்வைத்து ஏறிய போது மஹிந்த ராஜபக்ச, கால் தடுக்கி, நிலைதடுமாறி கீழே விழப்போனார்.

அப்போது அருகில் இருந்த அவரது உதவியாளர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதால் நிலத்தில் அடிபடாமல் காப்பாற்றப்பட்டார் என குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.