அரசாங்கம் ஸ்திரமாக உள்ளது – கயந்த கருணாதிலக

அரசாங்கம் ஸ்திரமாக இருப்பதாகவும், அரசாங்கத்திற்கு எவ்வித ஸ்திரமற்ற தன்மையும் இல்லை எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் காணப்படும் குறைகளை சரி செய்து, மிகவும் வலுவாக முன்னோக்கிச் செல்ல திட்டமிடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றிட்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய இணக்கப்பாடு ஏற்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகரகமையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.