கழுத்தில் சுருக்கிட்டு தாயும், மகனும் தற்கொலை!

கண்டி, முல்கம்பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாயும், மகனும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தாயும், மகனும் இரண்டு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் 69 வயதான தாயும் 44 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. கண்டி பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.