கோத்தபாயவுக்கு அண்ணணின் நிலை வருமா?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி இருக்குமாறு ஜோதிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோத்தபாய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் ஜோதிடம் பார்க்க சென்றுள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள ஞானம்மா என்பவரை சந்திப்பதற்கே குறித்த இருவரும் நேற்று சென்றுள்ளனர்.

இதன்போது தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியிருக்குமாறு கோத்தபாயவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் எவ்வித அரசியல் மாற்றங்களும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷர்கள் ஜோதிடத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ஜோதிட ஆலோசனைக்கு அமைய மஹிந்த பதவியை பறி கொடுத்தார்.

இந்நிலையில் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜோதிடரின் ஆலோசனை அவரை பெரிதும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.