இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல் தொடர் போல ‘Lankan Premier League’ எனும் டி20 லீக் தொடரை நடத்த உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த 2008ஆம் ஆண்டு IPL-ஐ அறிமுகப்படுத்தியது. இதற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் ஆகிய நாடுகளும் இது போன்ற டி20 லீக் தொடர்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியமும், டி20 லீக் தொடரை நடத்த களமிறங்கியுள்ளது, இதற்கு ‘Lankan Premier League’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தொடர், வருகிற ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை அறிவித்துள்ளது.
மேலும், இந்த தொடர் நடைபெறும் காலகட்டத்தில், இலங்கை அணி எந்த விதமான சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.