மோப்ப நாயால் மாட்டிக்கொண்ட சிவனொளிபாத மலை சென்ற பக்தர்கள்!

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற பக்தர்கள் 27 பேரிடமிருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் நேற்றிரவு “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது போதைப்பொருளை கொண்டு சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலையினை தரிசிப்பதற்காக சென்ற பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்களிடமிருந்தே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது 8 மில்லிகிராம் ஹெரோயினும், 59750 மில்லிகிராம் கஞ்சாவுமே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.