அரசுமுறைப் பயணமாக தன் குடும்பத்தினருடன் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
அரசுமுறைப் பயணமாக வந்துள்ள அவர், வருகின்ற 25-ஆம் திகதி வரை ஒருவார காலம் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியமிக்க தாஜ்மஹால், பஞ்சாப் பொற்கோவில், டில்லியில் உள்ள புகழ்பெற்ற மசூதி உள்ளிட்டவற்றுக்கு தன் குடும்பத்தினருடன் செல்ல இருக்கிறார்.
மேலும், சில முக்கிய வர்த்தக பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர்களை சந்திக்கும் அவர், வரும் 23-ஆம் திகதி இந்திய பிரதமர் மோடியையும் சந்தித்து பேசவுள்ளார்.
ஜஸ்டினின் இந்த பயணம், இருநாட்டு மக்களிடையே இருக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.