மனைவியின் புதிய ஆசை: நிறைவேற்றுவாரா மக்ரோன்?

பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையில் புதிய சமையல் அறை ஒன்றை அமைக்க பிரிஜித் மக்ரோன் முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்பவர்களின் பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் தங்குவதற்கு வசதியாக பிரத்யேகமாக அமைக்கப்பட்டது எலிசே மாளிகை.

இந்த மாளிகைக்கு குடிவரும் ஜனாதிபதி குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்தார் போல் சில மாற்றங்களை கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது மாளிகையில் வசித்து வரும் ஜனாதிபதி மனைவி பிரிஜித் மக்ரோன், நவீன சமையல் அறை ஒன்றை அமைக்க ஆசைப்படுகிறாராம், சாப்பாடுகளை தாமே சமைத்து சாப்பிடவும் விரும்புகிறாராம்.

எனவே அவரின் அந்த ஆசையை ஏற்று எலிசே மாளிகையில் விரைவில் புதிய சமையலறை அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.