இதுவும் “திருவிளையாடல்” தான்: “சம்பந்தரும், முனிவரும்”.. (இது எப்படி இருக்கு?)
சம்பந்தர் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
முனிவர் : இல்லை, நானே, கேட்கின்றேன்.
சம்பந்தர் : கேளும்
முனிவர் : சற்று பொறும்
சம்பந்தர் : கேளும்.. ( சற்று அழுத்தமாக )
முனிவர் : பிரிக்க முடியாதது என்னவோ?
சம்பந்தர் : கூட்டமைப்பையும், என்னையும்.
முனிவர் : பிரியக்கூடாதது?
சம்பந்தர் : ரணிலும், நானும்.
முனிவர் : சேர்ந்தே இருப்பது
சம்பந்தர் : கூட்டமைப்பும், அரசாங்கமும்
முனிவர் : சேராமல், இருப்பது?
சம்பந்தர் : தமிழ்த்தேசியமும், சுமந்திரனும்.
முனிவர் : சொல்லக்கூடாதது?
சம்பந்தர் : 02 கோடி ரகசியம்.
முனிவர் : சொல்லக்கூடியது?
சம்பந்தர் : 2018இல் தீர்வை பெற்றுத்தருவேன்.
முனிவர் : ஆட்சிக்கு, தேவை?
சம்பந்தர் : மக்கள் மறதி.
முனிவர் : பார்த்து ரசிப்பது
சம்பந்தர் : தமிழ்த்தேசிய பேரவையின் வளர்ச்சியை
முனிவர் : உடனிருந்து, கெடுப்பது?
சம்பந்தர் : சுமந்திரன்
முனிவர் :- போட்டிக்கு?
சம்பந்தர் :- கயேந்திரகுமார்.
முனிவர் :- பேட்டிக்கு?
சம்பந்தர் :- ஆனந்தசங்கரி
முனிவர் : தோழனாக, சேரவிருப்பது?
சம்பந்தர் : டக்ளஸ்
முனிவர் : பொய்க்கு?
சம்பந்தர் : சுமந்திரன்
முனிவர் : சொல்லுக்கு?
சம்பந்தர் : மாவை
முனிவர் : ஆசைக்கு?
சம்பந்தர் : ஆர்னோல்ட்
முனிவர் : யால்ராவுக்கு?
சம்பந்தர் : சரவணபவான்
முனிவர் :அதிகாரத்திற்கு?
சம்பந்தர் : சிறீதரன்
முனிவர் : அறிவுக்கு?
சம்பந்தர் : நான்
முனிவர் :- பரிதாபத்திற்கு?
சம்பந்தர் :- தமிழினம்…
முனிவர் : ஐய்யா ஆள விடு……. எனக்கு தெரிந்தது அவ்வளோ தான்……… இப்பிடியே ஓடிறன்…..