தூக்கிமில்லாமல் தவிக்கிறீங்களா? நெல்லிக்காய் பயன்படுத்துங்கள்..

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும்.

நெல்லிக்காய் தூக்கமின்மையைப் போக்கும். அதிலும் நெல்லிக்காய் ஜூஸ் உடன் ஜாதிக்காய் பொடி சேர்த்து கலந்து குடித்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

முக்கியமாக நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். சரும செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், சரும அழகு தானாக அதிகரிக்கும்.