யாழ்.மாவட்டத்தில் புகையிலை பயிர்ச் செய்கைக்கு பதிலாக கற்றாழை மற்றும் நீண்டகாலம் பயன் தரக்கூடிய மிளகாய் செய்கையும் என்பன அறிமுகம் செய்யப்படவுள்ளன.இதன் முதற்கட்டமாக, கற்றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்துள்ளதாக மாவட்ட விவசாய போதனாசிரியர் திருமதி சசி பிரபா கைலேஸ்வரன் தெரிவித்தார்.மேலும், 2020 ஆண்டுடன் புகையிலைப் பயிர்ச்செய்கையை நிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதால் அதற்கு பதிலாக கற்றாழை மற்றும் நீண்டகாலம் நின்று பயன்தரும் மிளகாய்ச் செய்கை என்பன அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வறள் நிலத் தாவரமான கற்றாழையை தோட்ட நிலத்தில் மட்டுமல்ல திருத்தி அமைக்கப்படாத நிலங்களிலும் செய்கை பண்ணலாம். கற்றாழை ஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கு மேல் விற்பனையாகின்றது.
நல்ல விளைச்சலில் ஒரு மடல் தண்டு 700 கிராமுக்கு குறையாத நிறை உடையதாக இருக்கும். செய்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஊக்குவிப்பு உதவிகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட விவசாய போதனாசிரியர் திருமதி சசி பிரபா கைலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.