உடல் பருமனாகாமல் ஒல்லியாக இருப்பதற்கு வயிற்றிலுள்ள பூச்சிகளும் காரணம்.
உடலுக்கு தேவையான சத்துகளை கிருமிகள் உறிஞ்சிக்கொள்கின்றன, இதற்கு பல மருந்துகளை எடுத்துக் கொள்வதை விட கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
மணலிக்கீரை மிகச்சிறந்த தீர்வை தருகிறது, இதன் இலை, தண்டு என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது, இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்றும் அழைப்பார்கள்.
மணலிக்கீரையை நீர்விட்டு அரைந்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும், நான்கு நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் மூன்று நாட்கள் அருந்த வேண்டும், இப்படி செய்தால் குடலிலுள்ள புழுக்கள் நீங்கும்.
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்.
மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.
இதேபோன்று ஈரலை பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் சாப்பிடலாம்.