தற்கொலைக்கு முயன்ற நபரை அதிரடியாக காப்பாற்றிய இளம்பெண்… !

தான் அந்த நபரின் காதலி என்று காவலர்களிடம் பொய் சொல்லி நடித்து, தற்கொலைக்கு முயன்ற வாலிபரை நெருங்கி அவரிடம் பேசி, அரவணைத்து லிப்லாக் முத்தமிட்டு காப்பாற்றியுள்ளார் ஒரு பலே கில்லாடி இளம்பெண்.

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கிறது ஷெனென், குவாங்டாங் எனும் பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ஷாப்பிங் மால் கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என ஒரு இளைஞர் பீதியை கிளப்பினார்.

தீயணைப்பு படையினர், காவலர்கள், பொதுமக்கள் என அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில், காவலர்களிடம் லூயி வென்ஷியூ எனும் இளம்பெண், நான் தான் அந்த இளைஞரின் காதலி, நான் அவரிடம் பேச வேண்டும் என்று கூறி, அவரை அரவணைத்து ஆறுதல் கூறி காப்பாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வு சுற்றி இருந்த அனைவரையும் நெகிழ வைத்தது. அந்த நபரை காப்பாற்றிய பின்பு தான் தெரிந்தது லூயி வென்ஷியூ அவரது காதலியே இல்லை. அந்நபரின் வாழ்க்கையை காப்பாற்ற இவ்வாறு பொய் கூறியுள்ளார் என்று.

குறித்த பெண்ணும் பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அதனால் ஏற்படும் வலி எவ்வளவு என்றும் தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த இளைஞரின் விபரீத முடிவிற்கு காரணம் தனது தாய் இறந்துவிட்டதாகவும், இரண்டாவதாக வந்த தாய் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், தந்தையின் பணத்தினை எடுத்துவிட்டு எஸ்கேப் ஆகியதும், இதனால் தானும், தனது தந்தையும் பகுதி நேரம் வேலை பார்த்து வருவதாகவும் கூறியதாக அப்பெண் கூறியுள்ளார்.