நிராகரிக்கப்பட்டது மைத்திரியின் கோரிக்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் நிதியமைச்சுப் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக பந்துல குணவர்த்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.

கொழும்பு பொரளையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ​போது நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், அண்மையில் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட முறையில் என்னிடம் நிதியமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். எனினும் நான் மறுத்துவிட்டேன்

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் தன்னார்வ அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி பொருளாதார நெருக்கடியை தணிப்பது தவிர அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதில் கூட்டு எதிர்க்கட்சிக்கு எதுவித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.