இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் தமது தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை புதிய பிரதமரை நியமிப்பதில் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் கருத்தை பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் திலங்க சுமத்திபால மேலும் தெரிவித்தார்.

நாளை நாடாளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பினை அவர் விடுத்திருக்கிறார். நாளைய தினம் இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் நாளாக இருக்கும் என்கிறார்கள் தகவல் அறிந்தவட்டாரத்தினர்.

அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று சிலர் சொல்லும் அதேவேளை, பிரதமர் பதவியிலும் மாற்றம் வரும் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்குப் பதிலாக கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் விரும்புவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.