இலங்கையின் அரசியலில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகும் கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய பிரதமர் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில் சபாநாயகரை பிரதமராக நியமிப்பதற்கு, ரணில் விக்ரமசிங்க விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.