ஆளை மயக்கும்படி மௌத் ஆர்கன் வாசிக்கும் யானை! – வீடியோ

யானைகள் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு குதூகலம் தான்.

அவை கிரிக்கெட் விளையாடுதல், ஓட்டபந்தயம் விளையாடுதல், என பல செட்டைகளை பார்த்துள்ளோம். ஆனால், மௌத் ஆர்கன் வாசித்து பார்த்திருக்க வாய்ப்பில்லை.

கோயம்பத்தூரில் உள்ள தேக்கம்பட்டியில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமில் தான் அந்த சுவாரஷ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, அங்குள்ள ஆண்டாள் என்ற யானையானது மௌத் ஆர்கன் வாசித்து காண்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த புத்துணர்வு முகாம் ஜனவரி 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

48 நாட்கள் நடைபெறும் இந்த புத்துணர்வு முகாமில், யானைகளுக்கு உடல் பரிசோதனை, எடை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த முகாமில், ஆண்டாள் என்ற யானை கலந்து கொண்டுள்ளது. யானைப்பாகன், மௌத் ஆர்கன் ஒன்றை கொடுத்ததும், அதை வாங்கிய ஆண்டாள் யானை, தலையை ஆட்டி ஆட்டி அழகாக வாசிக்கிறது.

ஆண்டாள் யானை மௌத் ஆர்கன் வாசித்து அங்கிருப்பவர்களை கவர்ந்து வருகிறது. ஆண்டாள், மௌத் ஆர்கன் வாசிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ வெளியிட்ட சில நேரத்திலேயே யானைக்கு லைக்குகள் குவியத் தொடங்கிவிட்டது. ஆண்டாள் யானைக்கு, மௌத் ஆர்கன் இசைக்கருவியை வாசிக்க ஜம்போ இசைக்கலைஞர் ஒருவர் பயிற்சி அளித்து வந்துள்ளார்.