தஞ்சை திருநாகேஷ்வரம் அருகே உள்ள ஆலயத்தில் குறிப்பிட்ட தினத்தில் மட்டும் ராஜநாகம் வில்வ மரத்தில் உள்ள வில்வ இலையை கொய்து கோமுக பாதைவழியாக சென்று சுவாமியை வழிபடும் அற்புத நிகழ்வு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த அற்புத காட்சியை பலரும் வியப்புடன் பார்த்து பகிர்ந்து உள்ளனர்.சிவனுக்கு பிடித்தது வில்வ இலை.இந்த வில்வ மரம் இன்றளவும் பல சிவன் கோவில்களில் இருப்பதை பார்க்கமுடியும்.
வில்வ இலையால் மாலைபோன்று தொடுத்து சாமிக்கு போட்டு தரிசனம் செய்வர்.
இந்நிலையில் மனிதர்கள் போன்றே, ஒரு நாகமும் சிவன் சிலைக்கு வில்வ இலையை கொண்டு வந்து, சிலை மீது ஏறி வழிபடுகிறது
இந்த கோவிலுக்கு,பக்தர்கள் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர்.