இந்தியாவில் இருதயம் மாற்று அறுவை சிகிச்சைக்கு வந்த நபர், தானமாக கிடைத்த இருதயம் அளவில் சின்னதாக இருந்ததால் இரண்டு இதயத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
7 மணி நேரம் நீண்ட குறித்த அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த 56 வயது நபர் உலகில் இருதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் 150-வது நபர் என பதிவானார்.
இருதய நோயால் மிகவும் ஆபத்தான கட்டத்தில் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சையில் இறுதிகட்டத்தில் மருத்துவர்களுக்கு அந்த உண்மை தெரிய வந்தது, குறித்த நபருக்கு தானமாக கிட்டிய இருதயமானது அளவில் சிறியது என்று.
நோயாளி மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதால் வேறு இருதயம் கிடைக்கும் வரை காத்திருக்கவும் முடியாத நிலை.
இதனையடுத்து மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். தானமாக கிடைத்த இருதயத்தையும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்ட இருதயத்தையும் ஒன்றாக இணைத்துள்ளனர்.
மிகவும் ஆபத்தானதும் அரியதுமான இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.
இதனால் குறித்த நபர் உலகின் 150 பேருக்கு மட்டும் நடத்தப்பட்ட அரிய சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளார்.
இருப்பினும் மருத்துவர்கள் குறித்த நபரை எச்சரித்தே அனுப்பியுள்ளனர்.