உங்களுக்கு வாஸ்து தோஷம் இருக்கா?

நாம் வாழும் வீட்டில் வாஸ்து சரியில்லை என்றால் நம் வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சினை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு நாம் முன்னோர் செய்த எளிய பரிகாரங்களை பார்ப்போம்.

  • வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.
  • ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.
  • பௌர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.
  • தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
  • ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.
  • ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.