நாட்டில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் ஐந்து மாவட்டங்களில் வாழும் 91 ஆயிரத்து 381 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவல்களை அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 612 பேரும், புத்தளம் மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 16 ஆயிரத்து 18 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 50 ஆயிரத்து 918 பேரும், அநுராதபுரத்தில் 9 ஆயிரத்து 655 பேரும், பொலன்னறுவை 990 பேரும் வறட்சி காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.