சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. சாமியார்!

தென்கிழக்கு ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மாலாவி நாட்டில் பூப்படையும் சிறுமிகளை கன்னி கழிக்க எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள சாமியாரை பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலாவி நாட்டின் தென்பகுதியில் வாழும் பழங்குடியின மக்களிடையே பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு மூடநம்பிக்கை சார்ந்த மத சம்பிரதாயம் நிலவி வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.

இங்கு வாழும் குடும்பங்களில் பருவவயதை அடைந்து பூப்பெய்தும் சிறுமிகளை ‘பரிசுத்தப்படுத்துதல்’ என்ற பெயரில் தங்களது இனத்தை சேர்ந்த ’ஹையெனா’ என்னும் சாமியார்களுடன் முதன்முதலாக உடலுறவில் ஈடுபடுத்துவதை இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரு புனிதமான சம்பிரதாய சடங்காகவே கருதி வருகின்றனர்.

இப்படி ’சடங்கு’ செய்யவில்லை என்றால் வயதுக்குவரும் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து விடுவார்கள் என்ற மூட நம்பிக்கையும் இவர்களிடையே நிலவி வருகிறது.

பல லட்சம் மக்களை கொண்ட இந்த பழங்குடியினர் கூட்டத்தில் இந்த ‘புனித சடங்கை’ செய்வதற்காக ’ஹையெனா’ என்றழைக்கப்படும் சுமார் பத்து சாமியார்கள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது.

மாதந்தோறும் பல நூற்றுக்கணக்கான சிறுமிகள் பூப்பெய்துவதால் இவர்கள் அனைவரும் எப்போதுமே ‘பிஸி’யாக இருந்து வருகிறார்கள். அதனால், தங்கள் வீட்டுப்பெண் வயதுக்கு வந்தவுடன் இந்த சாமியார்களுக்கு சுமார் 300 முதல் 500 ரூபாய்வரை முன்பணம் தந்து ’அப்பாயின்ட்மென்ட்’ வாங்க சில வேளைகளில் அங்கு போட்டாப்போட்டியும் நடப்பதுண்டு.

இந்த சாமியார் கூட்டத்தில் வெகு முக்கியமான ‘கைராசிக்காரர்’ என்று எரிக் அனிவா என்ற 40 வயது நபரை அனைவரும் மதித்து வருகின்றனர்.

எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள தங்கள் மகள்களை அனுப்பி வைப்பதை பல பெற்றோர் பெருமையாக கருதுகின்றனர்.

பருவம் அடைந்த பின்னர் முதல் மாதவிலக்குக்கு அடுத்த மூன்றாம் நாள் எரிக் அனிவா வீட்டுக்கு சிறுமிகளை அனுப்பி வைக்கின்றனர். அவருடன் தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சிறுமிகள், தாங்கள் பெண்ணாக பிறந்த நோக்கம் நிறைவடைந்த திருப்தியில் அங்கிருந்து தங்களது வீட்டுக்கு திரும்பி வருகின்றனர்.

இவர்களில் பல சிறுமிகள் தங்களது பெற்றோரின் கட்டளை மற்றும் மிரட்டலுக்கு அஞ்சியே இந்த சடங்குக்கு சம்மதித்ததாக கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட சடங்கின் மூலம் தங்களது மகள் திருமணம் செய்துகொள்ளும் பக்குவத்துக்கு வந்து விட்டாள் என்று பிறருக்கு நிரூபிக்க பெற்றோர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் அந்த பிரேதத்தை புதைப்பதற்கு முன்னர் எரிக் அனிவா போன்ற ஹையெனாவுடன் அந்தப் பெண் கட்டாயமாக உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற குல நிர்பந்தமும் உண்டு.

அதேபோல், கருச்சிதைவுக்கு பின்னரும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஹையெனாவுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயமாக உள்ளது.

தற்போது, சிறுமிகளை கன்னி கழிக்கும் சூப்பர் ஸ்டாராக விளங்கிவரும் எரிக் அனிவா, பிரபல செய்தி நிறுவனமான ‘பி.பி.சி’க்கு அளித்துள்ள ஒரு பேட்டியில் என்னிடம் அனுப்பப்பட்டவர்களில் பல பெண்கள் 12 முதல் 13 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுமிகள் என்றும், ஆணுறை போன்ற பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் பயன்படுத்தாமல் அவர்களை சந்தோஷப்படுத்தி வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

தன்னிடம் அந்த சிறுமிகள் அடைந்த சந்தோஷத்தை பிறருக்கும் அவர்கள் பூரிப்புடன் தெரிவித்து மகிழ்ச்சி அடைவதாகவும் இவர் கூறுகிறார்.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கையையும், பழக்கத்தையும் தடுக்க அந்நாட்டின் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

ஆனால், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ள எரிக் அனிவா போன்ற நபர்களுடன் சிறுமியர்கள் உடலுறவு வைத்துக் கொண்டால் அவர்களுக்கும் அந்த நோய் பாதிப்பு பரவும் என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் அங்குள்ள சில தொண்டு நிறுவனங்கள் மட்டும் ஈடுபட்டு வந்தன.

மாலாவி நாட்டில் உள்ள பத்தில் ஒருவர் எச்.ஐ.வி. நோய் தொற்றுடன் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த சுகாதாரத்துறை புள்ளி விபரங்கள் குறிப்பிடுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய எரிக் அனிவா-வை பின்னர் போலீசார் கைது செய்ததாக செய்திகள் வெளியாகின.