ஆனால், அது யாருக்காக கட்டப்பட்டதோ, யார் கட்டினார் என வரலாறு கூறுகிறதோ… அவர்களை சுற்றியும், அவர்களது குழந்தைகளையும் சுற்றியும் கூட பல திகைக்க வைக்கும் உண்மைகள் இருக்கின்றன…
• மும்தாஜ் வேறு ஒரு ஆணை திருமணம் செய்தவர். மும்தாஜை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை கொலை செய்தாராம் ஷாஜகான்.• தனது 14வது பிரசவத்தின் போது இறந்து போனார் மும்தாஜ்.
• அவுரங்கசீப் தனது தந்தையான ஷாஜகானையே வீட்டு சிறைப்பிடித்தார். இதற்கு அவர் கட்ட நிணத்தை கருப்பு தாஜ்மகால் மற்றும் ஷாஜகான் அதிக செல்வங்களை வாரியிறைத்தது போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன.
• 1628 – 1658 வரை இந்தியாவை ஆண்ட ஷாஜகானின் இறுதி சடங்கு எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்ற தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது.
தாஜ்மஹாலினுள் புதைந்துள்ள உலகுக்கு தெரியாத மர்மங்கள். தாஜ்மஹாலினுள் அடங்கி புதைந்துள்ள அந்த மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க
தாஜ்மஹால் உலக அதிசயங்கள் 7ல் ஒன்று என்பது நாம் அறிந்ததுதான். அதையும் தாண்டி இங்கு மறைந்துள்ள ரகசியங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம் வாருங்கள்
இப்போது நாம் தாஜ்மஹால் என பார்ப்பது உண்மையான தாஜ்மஹால் இல்லை. அதைவிட நான்கு மடங்கு பெரியதாக தாஜ்மஹாலை கட்ட நினைத்திருந்தார் ஷாஜகான்.
ஏறக்குறைய 20000 பேர் சேர்ந்து இரவு பகல் பாராது தாஜ்மஹாலை வடிவமைத்தனர் என்பது கூடுதல் தகவல். அவர்கள் யாரையும் உயிருடன் விட்டுவைக்கவில்லை என்பது ஷாஜகான் மீது சுமத்தபடும் குற்றசாட்டு. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை.
இப்போதைய மதிப்பு படி 65 பில்லியன் அமெரிக்க பண மதிப்பில் அதாவது பல பல கோடி கணக்கில் கட்டப்பட்டுள்ளது. கணக்கிட்டு பாருங்கள் … மயங்கி விழுந்துவிடுவீர்கள்.
இதன் தலைமை கட்டட வடிவமைப்பாளர் இந்தியராகத் தான் இருப்பார் என பலர் நம்பி வந்த நிலையில், அது இந்தியரால் கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.
தாஜ்மஹாலைக் கட்டிய பொறியாளர் உஸ்தாத் அகமத் லாஹரி பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர். டெல்லி செங்கோட்டையை கட்டியவரும் இவர்தான்.
தாஜ்மஹால் நிறம் மாறும் அதிசய கட்டிடம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சூரியனின் ஒளியைக் கொண்டு வெவ்வேறு நிறமாக மாறுகிறது.