யாழில் தங்கையுடன் வைபரில் ஆபாச அரட்டை! நண்பனை அடித்து நொருக்கிய அண்ணண்!!

யாழில் தங்கையுடன் வைபர் மூலம் தொடர்பு கொண்டு நட்பாயிருந்த நண்பனை, தனது மற்றைய நண்பர்களுடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளார் அண்ணன். அத்துடன் தங்கையின் தொலைபேசியையும் அடித்து நொருக்கியதுடன், தனது தங்கையையும் தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.யாழ் கொக்குவில் பகுதியில் இச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. நண்பன் மற்றும் ஏனையவர்களின் தாக்குதலால் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த 22 வயதான இளைஞன் யாழ் வைத்தியசாலையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தனது தங்கையின் தொலைபேசியை அண்ணன் எடுத்துப் பார்த் போதே தங்கைக்கும் தனது நண்பனுக்கும் உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது. தனது தங்கைக்கு ஜிம் செய்யும் போது, எடுத்த அரை குறை ஆடைகளுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் தனது தங்கையை சந்திப்பதற்கு வற்புறுத்திய சற்றிங் என்பன அண்ணால் பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே, தனது ஏனைய நண்பர்களுடன் சென்ற குறித்த அண்ணன் தங்கையுடன் கதைத்த இளைஞனை அவனது வீட்டில் வைத்தே தாக்கியதாகத் தெரியவருகின்றது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.