எந்த ராசிக்காரர்களிடம் கவனமாய் இருக்க வேண்டும்!!

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.எந்த ராசிக்காரர்களிடம் எப்படி பேசினால் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

மேடம்

எப்போதும் சற்று கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பேசுவது நல்லது. இல்லையெனில் இவர்களுக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். இவர்களிடம் பாராட்டிப் பேசினால் இவர்களுக்குப் பிடிக்கும். ஆனால் வாக்குவாதம் செய்தால் இவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இடபம்

இவர்களிடம் பேச்சு அன்பாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும். அன்பாகப் பேசி எந்தக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.

மிதுனம்

எப்போதும் அளவோடு மட்டுமே பேச வேண்டும். அளவுக்கு மீறிப் பேசினால், உங்களை அதிகம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

கடகம்

அன்பாகவும் அடக்கமாகவும் இருப்பார்கள். எனவே இவர்களிடம் பாசமாகப் பேசினால் போதும் எல்லா உதவியும் கிடைக்கும்.

சிம்மம்

பொறுமையாகவும், நேர்மையாகவும் பேசினால் நமக்குத் தேவையான உதவியைப் பெறலாம். இல்லையெனில் இவர்களிடம் எளிதில் காரியத்தைச் சாதிக்க முடியாது.

கன்னி

எப்போதும் நட்பை முறித்துக் கொள்ளக் கூடாது. அவர்களால் நிறைய ஆதாயம் கிடைக்கும். ஆனால் அவர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும்.

துலாம்

வேடிக்கையாகப் பேசுவார்கள். கம்பீரமாக நடந்து கொள்வார்கள். அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் இவர்களிடம் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களைப் பிரித்து மேய தொடங்கி விடுவார்கள்.

விருச்சிகம்

பேசியே மயக்குபவர்கள் இவர்கள். அன்பாக அனுசரித்துப் பேச வேண்டும். இவர்களிடம் அன்பாகப் பேசினால் அனைத்தையும் பெறலாம். ஆனால் கோபமாகப் பேசினால் சுனாமியாக மாறிவிடுவார்கள்.

தனுசு

இவர்களிடமும் அன்பாகப் பேசிக் காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். அவர்களை நான்கு வார்த்தை பாராட்டிவிட்டால் போதும் மதிமயங்கி விடுவார்கள். அன்புக்கு அடிமையானவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.

மகரம்

அதிகம் புலம்புவார்கள். அப்படியே நம்ப வேண்டாம். இவர்களின் இயல்பு அது. இவர்களிடம் எச்சரிக்கையாகவே பேச வேண்டும். இவர்களிடம் ஒரு காரியத்தைச் சாதிப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.

கும்பம்

அனைத்தையும் அறிந்தவர்கள் போல் பேசுவார்கள். இவர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று சொன்னால் போதும் நாம் நினைத்ததைச் சாதித்துக் கொள்ளலாம்.

மீனம்

ஆற்றில் இல்லை காற்றில் கூட மீன் பிடிப்பார்கள். இவர்கள் அனைவரையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக இருப்பார்கள். இவர்களிடம் மிகவும் கவனமாக யோசித்துப் பேச வேண்டும். இல்லையெனில் வாய் கொடுத்து மாட்டிக் கொள்வோம்.