க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு!

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இவ்வாராம் நிறைவடையவுள்ளன.

பாடசாலையின் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கான கால எல்லை நாளையுடன் நிறைவடைகின்றது.தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

எனவே பரீட்சார்த்திகள் விரைந்து விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த அறிவித்தல் விடுத்துள்ளார்.