இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. ஆசிட் ஊற்றி தீ வைத்த உரிமையாளர்…

சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் யாமுனா என்ற இளம்பெண் பணீயாற்றி வந்துள்ளார். உரிமையாளர் ராஜா என்பவர் அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.

இந்நிலையில் யமுனா வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார். தனக்கு அடிபணியாத அப்பெண்ணை ஆசிட் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த யமுனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணையை மேற்கொண்ட காவல் துறை ராஜாவை கைது செய்து வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற சம்பவம் சமீபத்தில் அதிகமாக அப்படிபட்ட சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.