தமிழகத்தில் பெற்றோரின் சண்டையை தடுக்க முயன்ற சிறுமி கோடாரியால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையின் திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன், கொத்தனாராக வேலை செய்யும் இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், மூன்று பிள்ளைகளும் உள்ளனர், இவர்களில் மூத்த பெண் இருளாயி(வயது 10).
இந்நிலையில் முருகன்- லட்சுமிக்கு அடிக்கடி சண்டை வருவதும், கோபித்துக் கொண்டு லட்சுமி அம்மா வீட்டுக்கு செல்வதும் வழக்கம்.
இதேபோல் சம்பவதினத்தன்று இருவருக்கும் சண்டை வந்தது, கோடாரியால் லட்சுமியை முருகன் தாக்க முயன்ற போது இருளாயி அதை தடுக்க முயன்றுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக இருளாளியின் தலையை கோடாரி பதம் பார்த்தது, சம்பவ இடத்திலேயே மகள் துடிதுடித்து இறக்க முருகன் தப்பியோடிவிட்டார்.
தலையில் காயத்துடன் வெளியே ஓடிவந்த லட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார், விரைந்து வந்த மக்கள் உடனடியாக லட்சுமியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
தகவலறிந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், தப்பியோடிய முருகனையும் தேடி வருகின்றனர்.