காருக்குள் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடி: சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

ஜேர்மனியில் காருக்குள் இருந்து தம்பதிகளின் சடலத்தை நிர்வாண நிலையில் பொலிசார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Rhine-Westphalia மாகாணத்தில் பூட்டிய கேரேஜில் இருந்து நிர்வாண நிலையில் இரண்டு உடல்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

கேரேஜுக்குள் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம் எனவும், கதகதப்புக்காக வாகனத்தின் எந்திரத்தை ஓடவிட்டுள்ளனர்.

இதனால் இருவரும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கார் எஞ்ஜின் பல மணி நேரமாக செயலில் இருப்பது அக்கம்பக்கத்தினர் எவரும் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

39 வயது ஆண் ஒருவர் மாயமானதாக பொலிசாருக்கு அவரது உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மட்டுமின்றி குறித்த வழக்குடன் தொடர்புடைய 44 வயது பெண்மணி மாயமானது குறித்தும் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையிலேயே பூட்டியிருந்த கேரேஜில் வாகனத்தின் எஞ்சின் சத்தம் கேட்கவும் பொலிசாரின் கவனம் கேரேஜுக்குள் திரும்பியது.

இது திட்டமிட்ட கொலை என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை சிக்கவில்லை எனவும், தற்செயலாக நடந்த விபத்தே இதுவெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அதுவும் உறுதி செய்யப்படும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.