சென்னையில் அமைந்துள்ள பெருமாள் கோயில் ஒன்றில், பெருமாள் சிலை கற்பூரம் காட்டும் போது, கண்சிமிட்டுவதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நெற்குன்றத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கரி வரத ராஜ ஸ்வாமி கோயில். இந்த கோயிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அப்போது, பெரும்படை இந்த கோயிலுக்கு திரண்டு வரும்.
இந்நிலையில், ஒரு சனிக்கிழமை தினத்தன்று பெருமாளுக்கு கற்பூர ஆராத்தி காண்பிக்கப்பட்டது. அச்சமயம், பெருமாள் கண்ணை மூடி திறந்ததாக பக்தர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரை அங்கிருந்தவர்கள் நம்பவில்லை. எனினும், அந்நபர் அடுத்த சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினரை அந்த கோயிலுக்கு அழைத்து வந்துள்ளார்.
அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கும், மற்ற சிலருக்கும் அதே நேரத்தில் பெருமாள் கண்சிமிட்டும் காட்சிகள் தென்பட்டிருக்கின்றது.
எனினும், இவ்வாறான சிலைகள் மனிதர்களாலேயே செய்யப்படுவதால், கண்கள் யதார்த்தமாக அமைந்திருக்கும். இது கண்கள் சிமிட்டிது போன்ற உணர்வை தந்திருக்கும் என்பது அறிவியல் கூற்று.
ஆனால் பக்தர்களில் சிலர், எல்லோருக்கும் இந்த கண்கள் தென்படுவதில்லை என்றும், கற்பூர ஆராத்தி காட்டும்போது சிலருக்கு மட்டுமே தெரிகிறது என்றும் கூறுகின்றனர்.