கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து: உயிர்தப்பிய குழந்தை! வீடியோ

குஜராத்தில் உள்ள பானஸ்காந்தா என்ற நெடுந்சாலையில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி லாரி ஒன்று விரைத்து வந்து தம்பதியனரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்

சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்துள்ளனர். அதில் 6-வயது சிறுவன் மட்டும் துணிச்சலுடன் எழுந்து வந்து தன் தந்தையை எழுப்பும் காட்சி அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.

லாரி அதிவேகத்தில் விரைத்து வந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த குடும்பத்தினரை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.