உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியால் மிகவும் பிரபலமானவர் ஓவியா. இதன் மூலம் பலரை தன்னுடைய ரசிகர்களாக்கி கொண்டார்.
இதனால் பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஓவியாவை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஆனாலும் ஓவியா நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட இவரது சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது இதற்கு ஓவியா பதிலளித்துள்ளார்.
நான் இன்னும் என்னுடைய சம்பளத்தை ஏறவில்லை. இவ்வளவு சம்பளம் வேண்டுமென யாரிடமும் கூறியதும் இல்லை. இது போன்ற செயல்கள் வருத்தமளிக்கின்றன என கூறியுள்ளார்.