நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தென்னிலங்கையில் மட்டுமல்லாது, வடக்கிலும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் உள்ள பெரும்பாலான சபைகளில் எந்த ஒரு கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளாத நிலையில், தற்போது வடக்கில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில், அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.
தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஒன்றில் ஈ.பி.டி.பியும், இரண்டில் தமிழ் காங்கிரசும், ஏனையவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளன.
இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பறும் நோக்கில் பல்வேறு தரப்பினர்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பெரும்பான்மை பலத்தை திரட்டுவதற்காக, இரகசிய பேரங்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
வடக்கில் தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் களத்தில் குதித்துள்ளதால், கட்சி தாவல்கள், தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.