வீட்டில் செல்வம் பெருக என்னென்னவோ முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆனால் விட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கிவிட்டு, நேர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் புகும்படி சில வாஸ்து காரியங்களைச் செய்தாலே போதும் உங்கள் வீட்டில் பணமழை கொட்ட ஆரம்பிக்கும்.
அதிலும், வியாழக்கிழமைகளில் சில வாஸ்து விஷயங்களைப் பின்பற்றி வந்தீர்களானால் செல்வம் பெருகும்.வியாழக்கிழமைகளில், சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து, குளித்த பின், விஷ்ணு பகவானுக்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற பொருட்களை தானம் வழங்கினால், வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் கொட்டும்.வியாழக்கிழமைகளில் குருவை வணங்கி, முறையாக விரதம் இருந்து வந்தால், அவர்கள் செல்வந்தர் ஆகலாம்.சிவபெருமானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை வைத்து, படைத்து வணங்கினால், அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகம் வந்து சேரும்.
வியாழக்கிமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் நிற இனிப்பு பலகாரம் எதேனும் ஒன்றை வைத்து படைத்து வணங்கி, மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
வியாழக்கிழமைகளில் வாழைப்பழத்தை தானமாக வழங்கி வந்தால், அது ஒருவரது வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும்.வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற சாமந்திப் பூ மாலையை விஷ்ணு பகவானுக்கு படைத்தால், விஷ்ணு பகவான் ஆனந்தமாகி, வீட்டில் செல்வத்தை பெருக செய்வார்.
வியாழக்கிழமைகளில் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால், அது உங்கள் வீட்டில் செல்வம், அதிர்ஷ்டம், சந்தோஷம் போன்றவை அதிகரிக்கச் செய்யும்.