மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவிட கட்டுமான பணிகளை மேற்கொள்ள 5 நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் குறைந்த விலையில் ஒப்பந்தம் கோரிய நிறுவனம் மார்ச் 1-ஆம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மெரினாவில் பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தத்து. பின்னர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
இந்நிலையில் ஒப்பந்ததாரர்கள் ஜெயலலிதாவுக்கு 40 கோடி அளவில் பிரம்மாண்டமாக நினைவிடம் அமைக்க திட்டமிட்டு விண்ணப்பம் கோரியுள்ளனர்.
இதுவரை 5 நிறுவனங்கள் கட்டுமான பணிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது. இன்று முதல் விண்ணப்ப படிவங்களை ஆராய்ந்து, வரும் மார்ச் 1-ஆம் திகதி குறைந்த விலையில் விண்ணப்பம் கோரிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.