கொழும்பு நீதிமன்ற வாசலில் விசித்திரம்!! ஒரேயொரு பதவிக்காக 12 ஆயிரம் பேர்!!

உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளர் பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளராக பதவி வகித்தவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதால் அப்பதவிக்கு அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.குறித்த பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2000 தொடக்கம் 2500 பேர் வரையானோர் நாளாந்தம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக உச்சநீதிமன்ற வாசலில் நீண்ட வரிசையில் இளைஞர்கள் பட்டாளமொன்று நேர்முகத்தேர்வுக்காக காத்திருப்பதை தினம்தோறும் காண முடிவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.