எகிப்தில் கணவர் சிக்கன் ரோல் வாங்கித் தர மறுத்ததால் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் நியூபியா-ராம்சேஸ் தம்பதி, இவர்கள் இருவருக்கும் கடந்த 40 தினங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பு கணவன், மனைவி இருவரும் அறிமுகம் இல்லாத நிலையில், மனைவி நியூபியா கணவரை ஷாப்பிங்கிற்கு அழைத்துள்ளார்.
வெளியே சென்றால் வீணாக பணம் செலவாகும் என்பதால் மனைவியுடன் வெளியே செல்வதை ராம்சேஸ் தவிர்த்து வந்துள்ளார்.
இருந்த போதும் மனைவியின் தொடர் வற்புறுத்தலால் அவருடன் வெளியில் சென்றுள்ளார். வெளியே சென்ற இருவரும் ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கே தனது கணவரிடம் அவர் சிக்கன் ரோலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.
ஏற்கனவே பழச்சாறு வாங்கிக் கொடுத்துவிட்டேன். இதற்கு மேல் எதுவும் வாங்கித் தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர் தனது பெற்றோரிடம் தனது கணவர் மிகவும் கஞ்சத்தனம் செய்வதாகவும், தனக்கென்று எந்த பொருளையும் வாங்கித்தர மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த கஞ்சத் தனத்தைப் பற்றி எனக்கு முன்பே தெரியாது எனவும், தெரிந்திருந்தால் நான் நிச்சயம் திருமணம் செய்திருக்கமாட்டேன் என்று கூறி, விவாகரத்துக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.