விண்ணை முட்டும் புகையால் அலறியடித்து ஓடிய மாணவர்கள்…

இந்தோனேசியா சுமத்ரா தீவில் உள்ள எரிமலை கடும் சீற்றத்துடன் நேற்று முன் தினத்திலிருந்து சாம்பலை கக்கி வருகின்றது. இதனால் எரிமலையை சுறறியுள்ள 16 ஆயிரம் அடி தூரத்திற்கும் கரும் புகை பரவியுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு இந்த பகுதியில் விமானங்களை இயக்க வேண்டாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

நெருப்பு வளையம் என அழைக்கப்படும் இந்தோனேசியாவில் ஏராளமான எரிமலைகள் உயிர்ப்புடன் இன்றும் உள்ளது. இதில் சுமத்தரா தீவில் சினபங் மலை என்ற பெயர் கொண்டு எரிமலை தான் தற்போது சீற்றத்துடன் புகை சாம்பலை கக்க துவங்கியுள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றியுள்ள பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் விண்ணை முட்டும் எரிமலை புகை சீற்றத்தை கண்டு பள்ளி குழந்தைகள் கதறியபடி ஓடும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சினிமாவில் வரும் கிராஃபிக் காட்சி போன்று அமைந்துள்ள காணொளி எரிமலையின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகின்றது. தற்போது சுற்றியுள்ள பகுதி முழுவதும் சாமபலால் மூடப்பட்டுள்ளது.