அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ உலகப் பிரசித்தமானது.இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர். ஏன் தெரியுமா? இங்குகண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ,மரம் மட்டைகளோ எதுவும் கிடையாது.
இந்த மர்ம பூமியில் கற்கள்தானாக நகர்ந்து செல்கின்றன.நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரைகண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள்தெளிவாகக் காணப்படுகின்றதாம்
பாலைவனம் போன்று பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில்வரட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ‘ஐஸ்’படர்ந்திருக்கும்.
இந்த பிரதேசத்தில் உள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழுபிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு.
ரயில் பாதை போன்று அவை சமாந்தரமாக அந்த பூமியைச் சுற்றி வருகின்றன.இவை பின்னோக்கி நகர்ந்த சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கிறது.
இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அந்த துண்டுகளே இந்தப் பூமியெங்கும்நடமாடுகின்றன.
இவை நடந்து திரியும் தூரம் 10 ஆயிரம் அடிகளைவிட அதிகமானது எனவும் சில கற்கள் ஒரு அடி மட்டுமே நகர்கின்றன எனவும்தெரிவிக்கப்படுகிறது
இந்த மர்ம பிரதேசம் குறித்து முதன் முதலில் 1948 ல் தகவல்வெளியானது. 1972-80 காலப் பகுதியில் பாரியளவிலான ஆய்வுகள்முன்னெடுக்கப்பட்டன.
கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ளகளிமண் தட்டா காரணம்? இவை வேகமான காற்றினால்தான்நகர்கின்றன என்று சிலர் தெரிவிக்கலாம். ஆனால் இப்பகுதியில் கடும்காற்று வீசுவதில்லை எனவே அந்த வாதமும் உறுதியானது இல்லை.
நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியே கற்கள் நகர்வதற்குக்காரணம் என மெசசுசெட்ஸ் பகுதி ஹெம்சயர் பல்கலைக்கழகஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெற்றுக் கண்களுக்குபுலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. சிறிய கல்லொன்று வருடம் முழுவதும் இரண்டரை அங்குலம் மட்டுமே நகர்ந்த போதும் 36 கிலோஎடையுள்ள கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கின்றமை குறிப்பிடதக்கது.
இந்தப் பாழடைந்த மர்மமான பிரதேசத்தில் மனித நடமாட்டம்இல்லாவிட்டாலும் கற்களின் நடமாட்டமும் அவை பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.