ஜப்பானைச் சேர்ந்த 28 வயது இளம்தொழிலதிபரான Mitsutoki Shigeta தாய்லாந்தில் வாடகைத் தாய்களை பயன்படுத்தி 16 குழந்தைகளை பெறச் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இளம்தொழிலதிபரின் இந்த செயல் மனிதக் கடத்தலுக்கு இணையானது என்று புகார் தெரிவித்து தாய்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குழந்தைகளை பெற்றெடுக்கும் தொழிற்சாலையாக தாய்லாந்தை பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்து நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2015ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் 3 குழந்தைகளுக்கான உரிமையை ஜப்பானியர் Mitsutoki Shigeta பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் 13 குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமையை அவர் பெற்றுள்ளார்.
13 குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த ஜப்பானியருக்கே குழந்தைகள் மீது உரிமை உள்ளதாக தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளம்தொழிலதிபரான Mitsutoki Shigeta இதனால் மகிழ்ச்சியில் உள்ளார்.
அது மட்டும் இல்லை. Mitsutoki போதுமான பணவசதி பெற்றவர் என்பதோடு, கடத்தலுக்கான நோக்கம் அவருக்கு இல்லை என்பதால் குழந்தைகள் மீதான உரிமை வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.