மொபைல் எண்கள் 13 இலக்கமாக மாற்றம்?

நாடு முழுவதும் தற்போது உபயோகப்படுத்தப்படும் மொபைல் எண் 10-லிருந்து 13 இலக்கமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அனைத்து மொபைலில் போருதப்படும் சிம் எண் 10 ஆக உள்ளது. தற்போது இது 13 இலக்கமாக மாற்ற மத்திய தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது.

அதுகுறித்து அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, இதற்கான பணிகள் வரும் ஜூலை மாதம் முதல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் மாதம் முதல் மொபைல் எண்கள் மாற்றும் படி தொடங்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்து மொபைல் எண்களும் 13 இலக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றும் கெடு விதித்துள்ளது.