மைத்திரி சொன்ன உண்மை? மகிந்தவை பாதுகாக்கும் ரணில்!

மகிந்தவை ரணில் விக்ரமசிங்க பாதுகாக்கின்றார் என்ற கருத்தை மைத்திரிபால சிறிசேனவும் சொல்கிறார் எனில் அதில் ஏதாவது இருக்க வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர ராஜிதவிடம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாதுகாக்கின்றார் என்ற குற்றச்சாட்டொன்று சமூகத்தில் உள்ளது.

ஜனாதிபதியும் இதற்கு சார்பாக கருத்துத் தெரிவித்திருந்தார் என்று கேட்ட போது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாம் எதிர்பார்த்தவாறு எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எவறால் தடைப்பட்டது என்பதை தான் அறியவில்லை.

ஜனாதிபதி இதனைக் கூறுகின்றார் எனின், அவருக்கும் ஏதாவது தெரிந்திருக்கும்.

ராஜபக்ஷாக்களுக்கும் அவருடன் உள்ளவர்களுக்கும் எதிராகவுள்ள கொலை மற்றும் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாம் எதிர்பார்த்த விதத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையென்பதுதான் உண்மை.

இருப்பினும், எதிர்வரும் காலத்தில் இது சரியாக முன்னெடுக்கப்படும் என்றார்.